வணக்கம் WORDPRESS

Image

                                                             வலைத்தள நண்பர்களுக்கு சிகரம்பாரதியின் அன்பார்ந்த வணக்கங்கள். நீங்கள் ஏற்கனவே என்னைப் பற்றி அறிந்திருக்கக் கூடும். தூறல்கள் மற்றும் சிகரம் ஆகிய வலைப்பதிவுகளின் உரிமையாளர். இப்போது உங்கள் ‘சிகரம்’  WORDPRESS இலும் கால்  பதிக்கிறது. இந்த தளத்தில் எனது சொந்தப் பதிவுகள் எதுவும் இடம் பெறாது. மாறாக, இது ஒரு தமிழ் இணையத் தளங்கள், வலைத்தளங்கள் போன்றவற்றின் திரட்டியாகச் செயற்படும். ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு புதிய, புதிய தளங்கள் அவற்றின் விபரங்களுடன் வெளியிடப்படும்.

                                              See full size image
                              தமிழில் வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளை வரிசைப்படுத்த பல்வேறு இணையத்தளங்கள் உள்ள போதும் அவற்றின் முகவரிகளை மட்டும் வரிசைப்படுத்த எந்தவொரு இணையத்தளமும் இல்லை. அந்தக் குறையைப் போக்கவே ‘சிகரம்’ உதயமாகியுள்ளது. முடிந்தவரை தமிழ்த் தளங்கள் அனைத்தையும் பட்டியல் படுத்தவே நான் முயற்சி எடுக்கிறேன். முயற்சி வெற்றி அளித்தால் இந்த தளத்தை தனி ஒரு தளமாக மாற்றி எனது சேவைகளை மேலும் விரிவு படுத்த எதிர் பார்க்கிறேன். இந்த பாரிய முயற்சிக்கு வாசகர்களின் மேலான ஆதரவு தேவை.
                           முதலில் எனது தேடலின் மூலம் கிடைக்கப் பெறும் தளங்களின் முகவரிகளை மட்டுமே பதிவு செய்ய உள்ளேன். பின்னர் வாசகர்களின் பங்களிப்புடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படும். தனி ஒருவனாக இந்த முயற்சியை நான் எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறேன் என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. ஆனாலும் முடியும் என்ற நம்பிக்கையில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். வலைத்தள வரலாற்றில் இது புதியதோர் புரட்சியாக இருக்கும். புரட்சி என்றாலே அது ‘சிகரம்’ தான். புரட்சி படைக்க ‘சிகரம்’ தயார். கைகோர்க்க நீங்கள் தயாரா? தயாரா………………..?
Advertisements
Posted in வரவேற்பறை, Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக